Sunday, September 9, 2012

பாற்சிப்பிகள்


சேகரிக்க வேண்டாம், கரையில் மின்னும்
மென்மையான பாற்சிப்பிகளை
உப்புச் சுவை மா கடலுக்கே அவை சொந்தமானவை
ஏன் தண்ணீரில் இறங்குவதில்லை
அச்சமா???

எண்ணிலடங்கா ரகசியங்கள் இல்லை கடலிடம்
இருப்பது ஒற்றைச் சிறு ரகசியமே…                                               
எல்லையில் வானும் கடலும்
இணையாதென்பது குறித்து நன்கறிந்தும்
ஏன் பொய்யான கனவுக் கவிதைகள்
கரையிலிருந்து கொண்டு கடல் குறித்து?

சேகரிக்க வேண்டாம் இப் பாற்சிப்பிகளை
கடலுக்குள் இறங்காமல்
கரையில் சுகமாக இருந்துகொண்டு…

- இஸுரு சாமர சோமவீர, 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# எதுவரை - இதழ் 04, ஆகஸ்ட் 2012
# உயிர்மை
# திண்ணை 

2 comments:

Yaathoramani.blogspot.com said...

கடலுக்குள் இறங்காமல்
கரையில் சுகமாக இருந்துகொண்ட//

அருமையான வரிகள்
அதிகம் சிந்திக்கச் செய்துபோகும்
அற்புதமான கவிதை
மிக மிக அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் ரமணி,

//கடலுக்குள் இறங்காமல்
கரையில் சுகமாக இருந்துகொண்ட//

அருமையான வரிகள்
அதிகம் சிந்திக்கச் செய்துபோகும்
அற்புதமான கவிதை
மிக மிக அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்//

வருகைக்கும், கருத்துக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !